மாவட்ட செய்திகள்

நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டன

நெதர்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டன.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன.

சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.

அதிகாரிகள் விசாரணை

மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மாதங்களுக்கு பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்