மாவட்ட செய்திகள்

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆழ்துளை குழாய் மூலம் மண் பரிசோதனை

சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆழ்துளை குழாய் மூலம் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 6 பிளாக்குகளில் 336 குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதியன்று டி பிளாக் குடியிருப்பில் உள்ள 28 வீடுகள் பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்த அறிய அண்ணா பல்கலைக்கழக மண்ணியல் துறை பேராசிரியர்கள் அடங்கிய வல்லுனர் குழு ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கு மண் பரிசோதனை செய்து முடிவு வந்த பின்னர், குடியிருப்புகளை முழுவதுமாக இடித்து அகற்றலாம் என யோசனை தெரிவித்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைமேலாண்மை இயக்குனர் சிவகிருஷ்ணா மூர்த்தி, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயா தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆழ்துளை குழாய் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்