மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கனிமொழி, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் - விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கனிமொழியை, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது அவர் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாவட்ட அரசு வக்கீல் சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி