மாவட்ட செய்திகள்

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேனி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தினத்தந்தி

தேனி:

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். தேனி மறைவட்ட அதிபர் முத்து தலைமை தாங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனை முடிவில் கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கேக் வழங்கினர்

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ. புனித பவுல் ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணி மற்றும் காலை 9.30 மணி ஆகிய நேரங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தேனி சபை குரு ஜேக்கப் வின்சிலின் தலைமை தாங்கினார். கிறிஸ்தவர்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் உத்தமபாளையம் வின்னரசி தேவாலயம், ராயப்பன்பட்டி புனித பனிமய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேவாலயத்தின் உள்ளே குடில்களில், இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டு இருந்தது.

இயேசு கிறிஸ்து பிறப்பின் மேன்மைகளை கூறும் பாடல்கள் பாடப்பட்டன. சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, அரண்மனைப்புதூர் உள்பட தேனி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்