மாவட்ட செய்திகள்

திருச்சியில் காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திருச்சியில் காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாநகரில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்தது. அப்போது மாநகரில் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி மனைகளிலும் மழைநீர் தேங்கியது. தற்போது சில இடங்களில் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் பல இடங்களில் காலி மனைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக திருச்சி வயலூர் சாலை சீனிவாசாநகர் பகுதியில் உள்ள காலிமனைகளில் மழைநீர் குளம்போல் நீண்டநாட்களாக தேங்கி நிற்பதுடன் அவை பாசி படர்ந்து பார்ப்பதற்கு புல்வெளி போல் காணப்படுகிறது.

மேலும் இங்கு தேங்கி உள்ள மழைநீரில் டெங்கு கொசுக்களை உருவாக்கும் லார்வாக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்