திருவள்ளூர்,
சிலர் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் அதனை இரவு நேரத்தில் திறந்து சாலையில் விடுகின்றனர்.
இவ்வாறாக அங்குள்ள வீடுகளில் இருந்து விடப்படும் கழிவுநீரானது அந்த பகுதியில் உள்ள சாலையில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த கழிவுநீரில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.