மாவட்ட செய்திகள்

கீரனூர் சிவன்கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கீரனூர் சிவன்கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.

தினத்தந்தி

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் சிவன்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே குளம் ஒன்றும் உள்ளது. மேலும் சமீபத்தில் தான் இந்த குளம் தூர் வாரப்பட்டது. கோவில் சுற்று புறத்தில் உள்ள தெருக்களில் ஓடும் மழைநீர் குளத்தில் சேரும் வகையில் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையில் குளம் நிரம்பி உள்ளது. இந்நிலையில் தெற்கு ரதவீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி வாடகை வீடுகள், வாடகை விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வரத்துவாரியின் வழியாக கோவில் குளத்தில் சேரும் படி வரத்துவாய்க்காலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைரோடு கழிவு நீரும் சேருகிறது. இந்த கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது.

செய்தி எதிரொலி

இந்த செய்தியின் எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர் மகேஷ்வரி மற்றும் பணியாளர்கள் அந்த பகுதியில் சென்று பார்வையிட்டனர். பின்னர் நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர் குளத்துக்குள் செல்லும் வழியை மணல் மூட்டைகளை வைத்து சரிசெய்து தடுத்தனர். கோவில் குளத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக சரிசெய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்