மாவட்ட செய்திகள்

நாகையில் விற்பனை எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்

நாகையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை எந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை எந்திரத்த நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆடியபாதம், சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார், நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திருப்பி அனுப்பினார்

விற்பனை எந்திரத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். பொருட்கள் வாங்க வருவோர் நீண்டநேரம் காத்திருக்காமல் இருக்க புதிய விற்பனை முனைய கருவிகளை வழங்க வேண்டும். 4 ஜி சேவை கொண்ட சிம் கார்டு வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்கிருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுபதி விற்பனை எந்திரத்தை பெற முடியாது என கூறி திருப்பி அனுப்பினர். மேலும் அவர் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதாக கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்