மாவட்ட செய்திகள்

வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை சாவு

பெரியபாளையம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்தது.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மகன் ரோகித் (வயது 2). நேற்று முன்தினம் வீட்டின் முன்பு ரோகித் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன் விளையாடி கொண்டிருந்த பந்து சாலையில் உருண்டு வந்தது. அந்த பந்தை எடுக்க ரோகித் சாலையில் தவழ்ந்து சென்றான்.

அப்போது சீத்தஞ்சேரியில் இருந்து வெங்கல் நோக்கி சென்ற வேன் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ரோகித் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனின் சக்கரத்தில் சிக்கி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி