மாணவன்
ஈரோடு சேலார் பாலுச்சாமி நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் இப்ராஹிம். இவன் சோலார் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்து உள்ளான்.
இந்த நிலையில் இப்ராஹிம் தனது சித்தப்பாவான சுல்தான் மற்றும் சித்தியுடன் ஊஞ்சலூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று மதியம் 1 மணிக்கு சென்று உள்ளான். அங்கு ஆற்றில் குளித்து கெண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு இப்ராஹிம் சென்றுவிட்டான்.
சாவு
நீச்சல் தெரியாததால் அவன் ஆற்றில் மூழ்கி இறந்தான். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் இப்ராஹிமின் உடலை சுல்தான் தேடினார். இதற்கிடையே மாலை 6.30 மணி அளவில் ஊஞ்சலூர் காவிரி ஆற்றங்கரையில் இப்ராஹிமின் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் விரைந்து சென்று இப்ராஹிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.