மாவட்ட செய்திகள்

திருவொற்றியூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

திருவொற்றியூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதை பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மெத் ஐஸ் போதை பொருள் விற்ற புது வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), ராயபுரத்தைச் சேர்ந்த காதர் மொய்தீன் (28), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த நாகூர் அனிபா (39), பெரம்பூர் தில்லை நகரை சேர்ந்த ஷேக் முகமது (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான மணிகண்டனின் தந்தை சரவணன், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்