மாவட்ட செய்திகள்

கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நகரத்தார்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). தொழிலாளி. அவருடைய மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் செல்லப்பாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாராம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்லப்பாண்டி தனது மனைவி ராக்கியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது.

கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டி தாக்கியதில் ராக்கிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ராக்கி தனது வீட்டின் முன்பு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்லப்பாண்டி திடீரென அரிவாளால் ராக்கியின் கழுத்தில் வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை அறிந்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ராக்கியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, செல்லப்பாண்டியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு