மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 60 பேர் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்

தினத்தந்தி

ஈரோடு,

முகமது நபி குறித்து இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் முகமது லரீப் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சலீம், மாநகர தலைவர் ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முகமதுநபியை இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 60 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்