பெங்களூரு,
நேற்று பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு சாந்தி நகர், மைசூரு ரோட்டில் உள்ள சேட்டிலைட் பஸ் நிலையங்களுக்கு வரவேண்டிய தமிழக அரசு பஸ்கள் கர்நாடகதமிழக எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டன. இதனால் சேட்டிலைட், சாந்தி நகர் பஸ் நிலையங்களில் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் கர்நாடகதமிழக எல்லையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
பின்னர், மாலை 5 மணிக்கு மேல் தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்குள் வந்தன. இதேபோல், பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசு பஸ்களும் தமிழகத்திற்கு புறப்பட்டு சென்றன.