மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளி மூடப்பட்டது வராண்டாவில் கல்வி பயின்ற மாணவர்கள்

ஆசிரியர்கள் போராட்டத்தால் புதுக்கடை அரசு பள்ளி மூடப்பட்டது. இதனால் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் வராண்டாவில் மாணவர்கள் கல்வி பயின்றனர்.

தினத்தந்தி

புதுக்கடை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவமாணவிகள் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். பாடம் நடத்த ஆசிரியர்கள் வராததால் ஒரு சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

புதுக்கடை அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 150 மாணவமாணவிகள் படித்து வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக கடந்த 3 தினங்களாக பள்ளி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். வகுப்பறைகள் எதுவும் திறக்காததால் வராண்டாவில் அமர்ந்த நிலையில் மாணவமாணவிகள் கல்வி பயின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்