மாவட்ட செய்திகள்

தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்-மந்திரியானால் ஆச்சரியப்பட மாட்டேன் - சஞ்சய் ராவத் சொல்கிறார்

தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்-மந்திரியானால் ஆச்சரியப்பட மாட்டேன் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் எம்.பி. புனேயில் நடந்த நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பீகார் முதல்-மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது :-

எந்த ஒரு ஆதரவும் இல்லாத இளைஞர் ஒருவர் (தேஜஸ்வி யாதவ்) உள்ளார். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை முகமைகள் அவரை வேட்டையாடுகின்றன. ஆனாலும் எதிர்க்கட்சிகளை நசுக்கி வரும் மத்திய அரசுக்கு அவர் சவாலாக உள்ளார். எனவே அவர் பீகாரின் முதல்-மந்திரி ஆனால் நான் ஆச்சரியப்படபோவதில்லை.

மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து கவர்னரை சந்திப்பதைவிட்டு, சம்மந்தப்பட்ட மந்திரிகளை சந்தித்து முறையிடலாம். நேரடியாக கவர்னரை சந்திப்பது மாநிலத்தை அவமதிப்பது போன்றதாகும்.

சரத்பவார் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதை பற்றி யாரும் கவலைப்படவேண்டிய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்