மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப் படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தினத்தந்தி

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள கொள்ளுக்காடு, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டிணம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைப்பட்டிணம், அடைக்கத் தேவன், மந்திரிப்பட்டிணம், அண்ணா நகர் புதுத்தெரு, சோமநாதன்பட்டிணம், கணேசபுரம், செம்பியன்மாதேவிபட்டிணம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 134 விசைப்படகுகளும் உள்ளன.

இந்த ஊர்களில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடலுக்கு செல்லவில்லை

இன்று(ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்