மாவட்ட செய்திகள்

போக்சோவில் சிறுவன் கைது

நத்தம் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் போக்சோவில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன். ஒரு ஜவுளிக்கடையில் சுமை தூக்கும் வேலைக்கு சன்று வந்தான். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அவர்கள் இருந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

அங்கு இருந்த சிறுமியை மீட்டனர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்