மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே காரை கடத்தி சென்ற கள்ளநோட்டு கும்பல் சிக்கியது

திருச்சி அருகே காரை கடத்தி சென்ற கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

தினத்தந்தி

சோமரசம்பேட்டை,

திருச்சி கே.கே.நகரை அடுத்துள்ள ஓலையூரை சேர்ந்தவர் அடைக்கலராஜ். இவருக்கு சொந்தமான காரை, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரவீன்ராஜ் (வயது21) என்பவர் ஒரு வேலை விஷயமாக கடந்த 9-ந் தேதி வெளியே எடுத்து சென்றார். திருச்சி ராம்ஜிநகர் கடைவீதி அருகே காரை நிறுத்தி விட்டு பிரவீன்ராஜ், அங்கு தனது நண்பர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 ஆசாமிகள், கத்தியை காட்டி மிரட்டி பிரவீன்ராஜிடம் இருந்து காரை கடத்தி ஓட்டிச்சென்றனர். இது தொடர்பாக ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட காரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்ட பகுதியான ஆவூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது காரை கடத்தி சென்ற 2 பேரும், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த கார் கடத்தி வரப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் தஞ்சை மாவட்டம் பெரியகோட்டையை சேர்ந்த மணிபாரத் (41), கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த ஹரிகரன் (22) ஆவர்.

கள்ள நோட்டு கும்பல்

மேலும் இருவரும் கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கடத்தப்பட்ட காரை போலீசார் சோதனை செய்ததில் 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. காரும் மீட்கப்பட்டது. கள்ளநோட்டு எங்கெல்லாம் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்றும், வேறு ஏதேனும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்