மாவட்ட செய்திகள்

குழித்துறை மறை மாவட்ட ஆயர் தாக்கப்பட்டார் 58 பேர் மீது வழக்கு

குழித்துறை மறை மாவட்ட ஆயரை தாக்கிய 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் குழித்துறை மறை மாவட்ட ஆயராக இருப்பவர் ஜெரோம்தாஸ். உண்ணாமலை கடையில் உள்ள ஆயர் இல்லத்தில் ஜெரோம்தாஸ் தங்கி வருகிறார். இந்த மறை மாவட்டத்துக்கு உட்பட்ட புனித சூசையப்பர், புனித அந்தோணியார் ஆகிய 2 ஆலயங்கள் அப்பட்டுவிளையில் உள்ளன. இந்த கத்தோலிக்க ஆலயங்கள் தனித்தனி பங்குகளாக செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக 2 ஆலய பங்கு மக்களிடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

இந்த பிரச்சினையை தீர்க்க குழித்துறை மறை மாவட்டம் பல்வேறு கட்ட முயற்சி எடுத்தது. ஆனால் இதில் தீர்வு ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி ஆயர் இல்லத்துக்கு சென்ற அந்தோணியார் ஆலய பங்கு மக்கள், அங்கிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது.

நேற்று மதியம் அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் மீண்டும் ஆயர் இல்லம் முன்பு திரண்டனர். அப்போது ஆயர் ஜெரோம்தாஸ், இல்லம் நோக்கி காரில் வந்தார். உடனே பங்கு மக்கள் காரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து காரில் இருந்து ஆயர் ஜெரோம்தாஸ் இறங்கினார்.

பங்கு மக்கள் அவரை முற்றுகையிட்டு, 2 ஆலயங்களிடையே உள்ள சொத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு, உள்ளே செல்லலாம் என்று தெரிவித்தனர். அப்போது சிலர் திடீரென ஆயர் ஜெரோம்தாஸை அங்கியை பிடித்து இழுத்து தாக்கினர். இதனை பார்த்த ஆயர் இல்ல காவலாளி மனோகரன் தடுக்க முயன்றார்.

இதனால் அவரை இரும்பு கம்பியால் பங்கு மக்கள் தாக்கினர். இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விபட்ட மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இதற்கிடையே தாக்கப்பட்ட ஆயர் ஜெரோம்தாஸ், காவலாளி மனோகரன் ஆகியோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவலாளி மனோகரன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அப்பட்டுவிளையை சேர்ந்த ஜோசப்ராஜ் (வயது 55), ஞானதாஸ் (43), பிரான்சிஸ் (60), ஆன்றோ ஜெகன் (32), புனிதா (35), பரஞ்ஜோதி (72), வர்கீஸ் (50) உள்பட 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்