மாவட்ட செய்திகள்

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: 2 பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், 2 பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

சேலம்,

கொளத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சசிகலா(வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தனர். அதில், கோட்டையூர் பகுதியை சேர்ந்த நல்லம்மாள்(58), பாப்பா(35) ஆகியோர் சசிகலாவின் நடத்தை குறித்து தகாத வார்த்தையால் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக நல்லம்மாள், பாப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நல்லம்மாள், பாப்பா ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்