திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை சீரழிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.