மத்திகிரி:-
ஓசூர் அச்செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 34), டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (25). இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரேம்நாத்தை, சண்முகம் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பிரேம்நாத் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.