மும்பை,
பா.ஜனதாவை சேர்ந்த பால்கர் தொகுதி எம்.பி.யான சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பண்டாரா-கோண்டியா தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே கடந்த ஆண்டு பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் விலகி காங்கிரசில் இணைந்தார்.
இதையடுத்து காலியான மேற்கண்ட இரு தொகுதி களுக்கும் நேற்று இடைத் தேர்தல் நடை பெற்றது. பால்கரில் பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் உள்பட 7 வேட் பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
சிவசேனா சார்பில் மறைந்த சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா போட்டியில் உள்ளார். பா.ஜனதா கட்சி முன்னாள் காங்கிரஸ் தலை வர் ராஜேந்திர காவித்தை முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக தாமு ஷிங்டே களத்தில் உள்ளார்.
இதேபோல பண்டாரா-கோண்டியாவில் பா.ஜனதா வின் ஹேமந்த் பட்லே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த மதுக்கர் குக்டே உள்பட 18 பேர்
போட்டியிடுகின்றனர்.