மாவட்ட செய்திகள்

இன்று முதல் ரெயில்கள் இயக்கம்: அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

இன்று முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.

தினத்தந்தி

தாமரைக்குளம்,

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி அளித்து அறிவித்திருந்தது. அதன்படி 5 சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றது. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

அரியலூர் மார்க்கத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் பயணம் செய்பவர்கள், ரெயில் நிலையத்திற்கு ரெயில் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணிந்திருந்தால் மட்டுமே ரெயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அரியலூர் ரெயில் நிலைய மேலாளர் பிரசாத் தெரிவித்தார்.

மேலும் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை கிடையாது. பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். உடன் வருபவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படும் நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்பதிவு மையம் மற்றும் இருக்கைகள், நடைமேடை உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு