பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம்(அக்டோபர்) மாதம் 14-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடத்துவது என்று முன்பு மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே அதாவது 10-ந் தேதி கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் மட்டுமே இந்த தொடர் நடத்தப்படும்.
இதில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். பிறகு அவற்றுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.