மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கடும் வீழ்ச்சி: சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்

அரூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கிறார்கள்.

தினத்தந்தி

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் தோட்டத்தில் இருந்து அறுவடை செய்யும் தக்காளியை விவசாயிகள் மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.

மேலும் விலை வீழ்ச்சியால் சிலர் தோட்டத்திலேயே தக்காளியை பறிக்காமல் விட்டு விடுகின்றனர். விலை வீழ்ச்சியை தவிர்க்க அரூர் பகுதியில் தக்காளி குளிர்பதன கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்