மாவட்ட செய்திகள்

காவிரி பிரச்சினையில் தமிழகத்துடன் புதுவை அரசு இணைந்து செயல்பட வேண்டும், அ.தி.மு.க. வலியுறுத்தல்

காவிரி பிரச்சினையில் புதுவை அரசு தமிழகத்தோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

அ.தி.மு.க. மாநில இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய நீர்வளத்துறை சார்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தின் முடிவு தமிழகம், புதுவை மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி விவாதிக்காமல், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ள திட்டம் என்ற சொல்லை மையமாக வைத்து அதனை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை மட்டும் கேட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பையே சீர்குலைக்கும் வேலையாக தெரிகிறது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியத்தை பற்றி குறிப்பிடவில்லை என்று கூறியிருப்பதும், கர்நாடகாவின் முதன்மை செயலாளர் கூட்டத்தில் திட்டத்தை பற்றி தான் விவாதிக்க வேண்டும் என்று கூறியிருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய ஒருவார்த்தைக்கு மத்திய அரசு தவறான அர்த்தத்தை கற்பித்து அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசோடு கைகோர்த்து தமிழகம் மற்றும் புதுவையை வஞ்சிப்பது உச்சகட்ட துரோகம் ஆகும்.

மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரிவரியாக படித்துப்பார்க்க வேண்டும். அல்லது மத்திய சட்டத்துறையிடம் தீர்ப்பை பற்றி சரியான விளக்கம் கேட்கவேண்டும். தீர்ப்பின் பின்புலத்தையும் புரிந்திருக்க வேண்டும். தீர்ப்பில் ஒன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மற்றொன்று கர்நாடக அரசு தமிழகம் புதுவைக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை சரியாக வழங்கவேண்டும் என்பது.

புதுவை முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் சிறந்த சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்ற உறுதியை மத்திய அரசின் சட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த பிரச்சினையில் புதுவை அரசு தமிழக அரசோடு இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்