மும்பை,
சீத்தாகேம்ப் பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் பொது இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அதிகளவில் நோய்கள் பரவி வருகின்றன.
இது குறித்து அகில இந்திய காமராஜர் மக்கள் நல அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கூறுகையில், சீத்தாகேம்ப் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் நோய் பரவி குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. எனவே இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.