மாவட்ட செய்திகள்

சங்கிலி பறிப்பு வழக்கில் கொள்ளையனை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்த 13 பேர் கைது

பழைய வண்ணாரப்பேட்டையில் சங்கிலி பறிப்பு வழக்கில் கொள்ளையனை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). ராயபுரம் ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறித்த வழக்கில் விக்னேசை கைது செய்ய அவரது வீட்டுக்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி சபின் தலைமையில் போலீசார் சென்றனர். அங்கிருந்த அவரது குடும்பத்தினர் விக்னேசை கைது செய்யவிடாமல் போலீசாரை தடுத்தனர்.

மேலும் விக்னேசை கீழே தள்ளிவிட்டு அவர் மீது குடும்பத்தினர் அனைவரும் விழுந்து போலீசார் கைது செய்யவிடாமல் பாதுகாப்பு வளையமாக நின்றனர். மேலும் போலீசாரை கல் மற்றும் கட்டைகளால் தாக்கவும் முயன்றனர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு விக்னேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 270 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் விக்னேசை கைது செய்யவிடாமல் போலீசாரை தடுத்த அவருடைய தாய் சாந்தி (வயது 47), தந்தை மோகன் (50), மனைவி சசிகலா (24) மற்றும் உறவினர்கள் தீபா (21), ஆன்ட்டோ (60), கிளாரா(21), அனிதா (21), கலைவாணி (43), கஜலட்சுமி (41), சந்திரா (40), திவ்யா (24), நந்தகுமார் (44) உள்பட 13 பேரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் விக்னேஷ் உள்பட கைதான 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்