மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கூட்டு வழிபாடு, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும்: ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் அருணன் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இணையவழி மூலமாகவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது சுழற்சிமுறையை ரத்து செய்து முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்கள் முழு அளவில் பள்ளிக்கு வருகின்றனர். எப்போதும் இல்லாத வகையில் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதாவது 1 ஆண்டுகளாக மாணவர்களை நேரடியாக சந்தித்து வகுப்புகளில் பாடம் எடுக்க முடியாமல் இணையவழி மூலமாக பாடங்களை கற்பித்து வந்தனர். கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களின் நிலை அறிந்து நற்சிந்தனையை போதிக்கிற வகையில் காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் எப்போதும் போல் மைதானத்தில் நன்னெறி கூட்டு வழிபாடு கூட்டத்தை நடத்தி மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை போதிக்கின்ற விதமாக ஆசிரியர்களின் அறிவுரை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், கொடிப்பாடல், ஒருமைப்பாடு உறுதிமொழி உள்ளிட்ட நன்னெறி போதனைகளை பள்ளிகளில் நடத்த ஆணை வழங்க வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளை பள்ளிகள் அளவிலும் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் நடத்தி மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மேற்படிப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்ந்து பயன் பெறும் விதமாக பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிக்களை நடத்தி மாணவர்களுக்கு உதவிட கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?