மாவட்ட செய்திகள்

மும்பை போலீசாரின் திறமையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை போலீசாரின் திறமையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை,

மும்பை போலீசார் பறிமுதல் செய்த நகை உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மும்பை போலீசுக்கு என வரலாறு, பாரம்பரியம் உள்ளது. மும்பை போலீசாரின் திறமையை யாரும் கேள்வி கேட்க முடியாது. மும்பை போலீசாரின் திறமையையும், புகழையும் மறைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த செயலை யார் செய்தாலும், அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

கொரோனா தொற்றுக்கு இடையே போலீசாரின் பணி மகத்துவம் மிக்கது. இதில் பல போலீசாரின் உயிர் பறிபோனது. போலீசார் உள்ளிட்ட முன்கள போராளிகளால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கொரோனாவுக்கு எதிரான களத்தில் தைரியமாக போராடிய போலீசார் சிலர் பாராட்டப்பட்டனர். அவர்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவுரவித்தார்.

இதில் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை