இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சுவீடனில் உள்ள கரோலிங்ஸ்கா நிறுவன நிபுணர்கள், மனித உடலில் சருமத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ஒரு சுண்டெலியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மிகக் குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிகமான, மிதமான அளவில் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றின் மூலம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை சீராகச் செயல்பட தோல் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஆக்சிஜன் அளவைப் பொறுத்து சுண்டெலிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்பட்டன. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என லைப் என்ற அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.