மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு பிடிபட்டது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று நேற்று புகுந்தது. இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். அது, நாகபாம்பு ஆகும். 5 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட அந்த பாம்பை வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர். வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது