மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோபால்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்த வழக்கில் கைதான வாலிபரை குண்டர் சட்டம் பாய்ந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 63). ஓய்வுபெற்ற ஊராட்சி துப்புரவு தெழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, பேலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த குமரவேலை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?