மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண், லாரி சக்கரத்தில் சிக்கி பலி

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சாலை பள்ளத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெண் சாவு

பெங்களூரு கொட்டிகே பாளையாவை சேர்ந்தவர் சர்மிளா(வயது 38). இவர், நேற்று காலையில் தனது உறவினருடன் கொட்டிகே பாளையாவில் இருந்து தாவரகெரே பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிளின் பின்புறம் சர்மிளா அமர்ந்திருந்தார். பேடரஹள்ளி அருகே அஞ்சனாநகர் பகுதியில் உள்ள அய்யப்ப சாமி கோவிலையொட்டி சர்மிளா சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்குவதை தவிர்க்க சர்மிளாவின் உறவினர் முயன்றதாக தெரிகிறது. அப்போது அவரது கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்ததால், பின்னால் அமர்ந்திருந்த சர்மிளா சாலையில் விழுந்தா. இந்த நிலையில், அதே சாலையில் பின்னால் வந்த ஒரு லாரியின் சக்கரத்தில் சர்மிளா சிக்கினார். இதில் சர்மிளாவின் உடலில் அந்த லாரி ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

சாலை பள்ளத்தால்...

மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நபர் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் பேடரஹள்ளி போலீசார் விரைந்து வந்து சர்மிளாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மாகடி ரோட்டில் இருந்து அஞ்சனாநகர் வரை காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுவதை தவிர்க்க மோட்டார் சைக்கிளில் சென்றவர் முயன்றதால், சர்மிளா கீழே விழுந்து பலியானது தெரியவந்தது.

இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் லாரி டிரைவர் மாதேஸ் என்பவரை கைது செய்தனர். பெங்களூரு நகரில் உள்ள சாலை பள்ளங்களால் ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி உள்ளனர். தற்போது பெண்ணும் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்