மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

திருவள்ளூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.

தினத்தந்தி

திருட்டு

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான வடக்கு ராஜ வீதியில் பா.ஜ.க. நிர்வாகியான பாலாஜி(வயது44) என்பவர் பால் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல அவர் கடையை திறக்க சென்றார்.

அப்போது கடையின் முன்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

மேலும் 2 கடைகளில்

அதேபோல அவரது கடைக்கு அருகில் திருவள்ளூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கேமராவையும் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜாஜி சாலையில் சந்திரசேகர்(61) என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பணம் ஏதும் இல்லாததால் தப்பிச்சென்றனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு