மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் சாவு

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஓட்டல் மாடியின் மீது உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்றார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த ரத்தினசபாபதி புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 21) தங்கி வேலை செய்து வந்தார். நேற்று காலை மோகன்ராஜ் அந்த ஓட்டல் மாடியின் மீது உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்றார். அப்போது மாடி மீது தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது எதிர்பாராதவிதமாக அவரது கைபட்டது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஓட்டல் முன்பு திரண்டு இதே போல கடந்த ஆண்டும் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். இது 2-வது சம்பவம் ஆகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்