கூடுதல் கட்டணம் வசூல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில்
அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி, அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனையடுத்து ராஜாமுத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு முன்பு மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும், விடுதிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவ-மாணவிகள், டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.