மும்பை,
நிழல் உலக தாதா சோட்டாராஜன் கடந்த 2015ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது மும்பை போலீசில் உள்ள அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சி.பி.ஐ. சோட்டா ராஜன் மீது மேலும் 3 வழக்குகளை பதிவு செய்து உள்ளது.
1995ம் ஆண்டு மும்பையில் தொழில்அதிபர் ஒருவர் மீது துப்பாக்கியால் சுட்டது, 1999ம் ஆண்டு கார் கிழக்கு பகுதியில் 3 பேர் சோட்டா ராஜன் கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டது மற்றும் 2002ம் ஆண்டு ஜூகுவை சேர்ந்த தொழில்அதிபர் ஒருவரை மிரட்டி சோட்டா ராஜன் கூட்டாளி ரூ.25 லட்சம் பறித்தது ஆகிய 3 சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.