மாவட்ட செய்திகள்

பஸ்சில் குட்கா கடத்திய வழக்கில் 3 பேர் கைது

பண்ருட்டி அருகே பஸ்சில் குட்கா கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பண்ருட்டி,

டெல்டா பிரிவு போலீசாரும், பண்ருட்டி போலீசாரும் இணைந்து பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அதை கடத்தியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் யுவராஜ்(வயது 35), வாணியர் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சீனுவாசன்(33), கொரத்தி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் செந்தில்குமார்(33) ஆகியோர் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்சில் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரைகைது செய்தனர். மேலும் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு