மாவட்ட செய்திகள்

துறையூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு

துறையூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பகளவாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் துறையூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் காலை 9 மணி அளவில் சரவணனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள் சரவணனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. அதிகாலையில் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் சரவணனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சுக்குரு (65) என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து சுக்குரு, சரவணன் ஆகியயோர் தனித்தனியாக புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிகாலை நேரத்தில் துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை