மாவட்ட செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது.

தினத்தந்தி

திருப்பூர்,

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லோகநாயகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராணி கோரிக்கை குறித்து பேசினார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணி பதிவில் பார்வையாளர் இலக்கை நீக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்