மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவரது மகன் மானஷ் (வயது 19). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி இரவில் வீட்டுக்கு செல்வதற்காக மானஷ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

மின்சார ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த 2 பேர் மானஷை தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றனர். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மானஷ், எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரோஜா, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மானிஷை தாக்கி செல்போன் பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த திவாகர் (19), முத்துகுமார்(19) அகியோரை நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை