மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே சோலபாளையத்தில் இருந்து காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப்பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கருவேலதேவி ஆகியோர் விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

மேலும் அதிகாரிகள் வருவது தெரிந்ததும் காரில் இருந்த நபர் தப்பி ஓடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறியதாவது:- சோலபாளையத்தில் காரில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரின் பின்புற இருக்கையை அகற்றி விட்டு, ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. காரில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் கார் பதிவு எண் கொடுக்கப்பட்டு உள்ளது. பதிவு எண்ணை வைத்து ரேஷன் அரிசி கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை