மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். இதையடுத்து மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காஞ்சீபுரம் மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் விறகுகளை சைக்கிளில் வைத்து மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு ஊர்வலமாக வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் பெட்ரோல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறிவிட்டதாகவும், கியாஸ் விலை உயர்வால் விறகு அடுப்புக்கு மாறிவிட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்