மாவட்ட செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், அ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சிட்டிபாபு, மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கலந்துகொண்ட தி.மு.க.வினர் கையில் காலிக்குடங்களை ஏந்தி குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மகாலிங்கம், அரிகிருஷ்ணன், கிறிஷ்டி, ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் தலைமையில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச்செயலாளர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், டி.ஜே.எஸ்.கோவிந்தராஜ், செல்வசேகரன், பொன்னேரி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு