மாவட்ட செய்திகள்

பெண்களை தொட்ட, நீ கெட்ட...! -எச்சரிக்கும் இணைய திருடி

இணைய வழி பணத் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பணக்காரர்களை குறிவைத்து நடத்தப்படும் இணைய திருட்டுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

தினத்தந்தி

இணைய திருட்டுகள் அனைத்திற்கும் பெண் ஆசையே காரணம் என்கிறார், செக்ஸி சைபார்க். பெரிய அளவில் அரங்கேறும் இணைய வழி பணத்திருட்டுகளுக்கு இவரும் ஒரு முக்கிய காரணம். தன்னுடைய வசீகர அழகால் ஆட்களை மயக்கி, அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்வது செக்ஸி சைபார்க்கிற்கு கைவந்த கலை. கணக்கில் கொள்ளமுடியாத அளவிற்கும் கைவரிசையை காட்டியிருக்கிறார். எப்படி ஏமாற்றுகிறார்?, ஏன் ஏமாற்றுகிறார்?, ஏமாற்று வேலையில் இப்போது என்ன டிரண்டு?... போன்ற கேள்விகளுக்கு, செக்ஸி சைபார்க் அவரது இணையதளத்தில் மனம் திறந்திருக்கிறார். அதை பார்க்கலாம்.

நான் யார், எந்த ஊர்... என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் பெண்களிடம் அத்துமீற துடிக்கும் ஆண்களால் தான், இணைய திருடியாக உருமாறினேன். பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிமுகமான சமயத்தில், ஏராளமான ஆண்களின் சீண்டலுக்கு ஆளானேன். பார்ப்பதற்கு நான் கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதால் தினமும் 100 ஆண்களிடமிருந்தாவது மெசேஜ் வந்துவிடும். போன் நம்பர், வீட்டு முகவரி, ஈ-மெயில்... என ஏதாவது ஒன்றை கேட்டு நச்சரிப்பார்கள். அப்போதுதான் ஆண்களின் ஆர்வத்தை பயன்படுத்தி ஏமாற்றும் எண்ணம் வந்தது. சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் ஜொள்ளு விடும் ஆண்களிடமிருந்து பணத்தை கறக்க திட்டம் தீட்டினேன். அதற்காக என்னுடைய கவர்ச்சி புகைப்படங் களை கொண்டு போலியான ஒரு டேட்டிங் வலைத்தளத்தை உருவாக்கினேன். அதன் பெயர்தான் செக்ஸி சைபார்க். காலப்போக்கில் அதுவே என்னுடைய பெயராக மாறிவிட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், முதல் வாரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் என்னுடைய போலி டேட்டிங் இணையதளத்தில் ஆஜராகினர். அதில் நிறைய விளம்பரங்களை வைத்திருந்ததால்... ஒரே வாரத்தில் பல லட்சங்கள் கிடைத்தன. அதை மூலதனமாக கொண்டு ஏராளமான போலி டேட்டிங் இணையதளங்களை உருவாக்கினேன். உங்க வீட்டுக்கு அருகிலேயே அழகான பொண்ணு வேணுமா..? என்று வரும் பாப்-அப் விளம்பரங்கள் அனைத்தும் என்னுடைய கைங்கரியம் தான். நப்பாசைக்கு அடிமையாகி, ஜொள்ளுவிட்டப்படி என்னுடைய இணையதளத்திற்குள் நுழைந்தால்... ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களது பணத்தை கறந்துவிடுவேன் என்றவர், இன்றைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்-டேட் ஆகியிருப்பதையும் விளக்கினார்.

தொழில் நுட்ப மாறுதலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டோம். ஆசை அழகிகள் என்ற பெயரில் ஏமாற்றத்தொடங்கினோம். ஸ்கைப் முறையில் பெண்கள் வீடியோ கால் பேசுவது, அரைகுறை ஆடைகளுடன் போட்டோக்களை பகிர்வது, வாட்ஸ்-ஆப்பில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் ஆசை வார்த்தை பேசுவது... என பெண் தோழிகளை வைத்து, ஆண்களின் வங்கி கணக்குகளை அபேஸ் செய்ய ஆரம்பித்தோம். இவை அனைத்திலும் இருந்து தப்பியவர்கள், கைரேகை அழகிகளிடமிருந்து தப்ப முடியாது. அது என்ன என்று கேட்கிறீர்களா..? தற்போது வங்கி கணக்குகளின் கடவுச்சீட்டாக கைரேகை பயன்படுவதால் அதை திருடி, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறோம். இத்தகைய தொழில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது படுஜோராக நடைபெறுகிறது. இவர்கள் சாதாரண பெண்களை போன்றே டேட்டிங்கிற்கு வருவார்கள். ஆண்களிடம் நெருக்கமாக பழகுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை ஆண்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்தால் அவ்வளவுதான். ஏனெனில் உடல் பாகங்களில் கைரேகையை பதிவு செய்யும் ரசாயன பொடிகளை கைரேகை அழகிகள் பூசியிருப்பார்கள். அதனால் அவர்களது கைரேகைகளை வைத்து சுலபமாக பணப்பரிமாற்றத்தை முடித்துவிடலாம். ஆகையால் பெண்களை தொடுவதற்கு முன் கவனமாக இருங்கள் என்று அறிமுகமில்லாத பெண்களை தொட்டால், நீ கெட்ட என்பதை போல் எச்சரிக்கிறார், செக்ஸி சைபார்க்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு