மாவட்ட செய்திகள்

சுற்றுலா தலங்கள், கடைகள் மூடல்

நீலகிரியில் 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்கள், கடைகள் மூடப்பட்டதோடு வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி

நீலகிரியில் 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்கள், கடைகள் மூடப்பட்டதோடு வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் ஊட்டியில் கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ், நகராட்சி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகை கடைகள், நகைக்கடைகள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பால் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டன.

ஆட்டோக்கள், வாடகை கார்கள்

ஊட்டி மத்திய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. வெளியிடங்களில் இருந்து அரசு விரைவு பஸ்கள் ஊட்டிக்கு வந்தன. அதில் இருந்து இறங்கிய பயணிகள் ஆட்டோக்கள், முன்பதிவு செய்த வாடகை கார்கள் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், ஊட்டியில் உள்ள 2 பணிமனைகளில் அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. முழு ஊரடங்கால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி மத்திய பஸ் நிலையம், சேரிங்கிராஸ், மணிக்கூண்டு சாலை வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.

சுற்றுலா தலங்கள்

இது தவிர ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் ஓய்வு எடுத்தது. வழக்கமாக வார விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

ஆனால் நேற்று முழு ஊரடங்கில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு, தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அழைப்பிதழ் காண்பித்து திருமண நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதித்தனர்.

அபராதம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வாகன போக்குவரத்து இல்லை. இதனால் கூடலூர் நகரில் உள்ள பல்வேறு சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மருந்தகங்கள், சிறிய உணவகங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாமல் காணப்பட்டது. மேலும் மசினகுடி, நடுவட்டம் உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை