மாவட்ட செய்திகள்

கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில், கடந்த நவம்பர் மாதம் குளிர் சீசன் தொடங்கியது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில், குளிரின் தாக்கம் குறைவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக தற்போது வரை குளிர் நிலவுகிறது. குளிருடன் காற்று வீசுகிறது. இதனால் பகல்நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவிய போதிலும், குளிர் குறையவில்லை. கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் பனிமூட்டம், கடல் அலைகள் போல தரை இறங்கியது.

இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அங்கு சென்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதேநேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 6 டிகிரியாக பதிவானது.

கடும் குளிரால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி சுற்றுலா பயணிகள் நடமாடி வருவது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை